ஜார்க்கண்டில் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் மார்ச் 28 ஆம் தேதி ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் இன்று அதிகபட்சமாக 278 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஜார்க்கண்டில் 1,175 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கூடி ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் 28 ஆம் தேதி சர்ஹுல் திருவிழாவில் ஊர்வலம் தடை செய்யப்பட்டதுடன் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கும் பொருட்டு மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தில்லி, மும்பை, குஜராத், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதித்துள்ளனர்.