முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: 500ஐ தாண்டிய ஒருநாள் பாதிப்பு

தெலங்கானாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 26 மார்ச், 2021 at 11:50 AM
தெலங்கானாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: 500ஐ தாண்டிய ஒருநாள் பாதிப்பு
பகிர்:

தெலங்கானாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,05,309 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

Advertisement

மேலும், தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,995 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

ஒரேநாளில் 204 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் இதுவரை 2,99,631 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 98.14 ஆக உள்ளது. 

மார்ச் 25-ம் தேதி நிலவரப்படி 57,548 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக 99.03 லட்சம் சோதனைகள் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.