முகப்பு
இந்தியா

ஆமதாபாத் ஐ.ஐ.எம்.இல் பேராசிரியர் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று

ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.இல் 40 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.இல் பேராசிரியர் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் மாணவர்கள், ஒரு பேராசிரியர் என 40 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 25 மாணவர்களுக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தனிமையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆமதாபாத் மாநகராட்சியின் துணை சுகாதார அதிகாரி மெஹுல் ஆச்சார்யா தெரிவித்தார்.

ஐ.ஐ.எம் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலர் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள்  விரைவாக மீண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டிலிருந்து ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் நுழைவதும் வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வளாகத்தில் உள்ள அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments