முகப்பு
இந்தியா

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகையும், அரசியல்வாதியுமான நஃபீசா அலி சோதியின் எக்ஸ் தள பதிவு பற்றி.

Updated On : 5 ஏப்ரல் 2026, 11:13 pm IST
நஃபீசா அலி சோதி - X
பகிர்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகையும், அரசியல்வாதியுமான நஃபீசா அலி சோதி மேற்கு வங்கத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வருகிற ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை நஃபீசா அலி சோதி, ”மேற்கு வங்கத்திற்கு அனைவரும் வாக்களியுங்கள். வங்காளத்தில் நடக்கும் தேர்தல் சண்டையில் பங்கெடுக்க முடியாததற்கு வருந்துகிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள மூன்றாம் நிலை புற்றுநோய்க்கு நாளை சிகிச்சை எடுக்கச் செல்கிறேன்.

Advertisement

Advertisement

மேற்கு வங்கத்தில் பாஜக லட்சக்கணக்கான முஸ்லிம்களின் வாக்குகளை நீக்கியதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தேர்தல் ஆணையம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நஃபீசா அலி சோதி - X

நான் தலைநிமிர்ந்து மேற்கு வங்கத்தை பெண் புலிகளின் கைகளில் நம்பிக்கையுடன் ஒப்படைக்கிறேன். நான் திரிணமூல் காங்கிரஸை நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை, அரசியல்வாதி, சமூக ஆர்வலர் எனப் பன்முகங்கள் கொண்ட இந்திய ஆளுமையான நஃபீசா அலி சோதி 1976-ல் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்று 'மிஸ் இன்டர்நேஷனல்' போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

1978-ஆம் ஆண்டு வெளியான 'ஜுனூன்' திரைப்படத்தில் அறிமுகமான இவர் மேஜர் சாப் (1998), லைஃப் இன் எ மெட்ரோ (2007), குஸாரிஷ் (2010) மற்றும் ஊஞ்சாய் (2022) போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றி வருகிறார். கட்சி ரீதியாக மட்டுமின்றி சமூக செயல்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

summary

Amid cancer surgery, Nafisa Ali 'prays for' TMC win in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.