முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 40,414 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 40,414 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 40,414 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 40,414 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,13,875 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 17,874 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 23,32,453 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 108 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 54,181 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,25,901 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments