தில்லியில் புதிதாக 1,881 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 1,881 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 1,881 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளது. புதிதாக 1,881 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,57,715 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 6,39,164 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,006 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
தற்போதைய நிலவரப்படி 7,545 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.