முகப்பு
இந்தியா

''தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கரோனா குறையவில்லை''

நாட்டில் மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
பகிர்:

நாட்டில் மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த 6 மாநிலங்களிலும் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு, சுகாதாரக் குழுவினை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.

அவர்கள் மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

அதற்கேற்ப மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கரோனா பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களில் தொற்று  இன்னும் குறையவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் நாட்டின் 79 சதவிகித கரோனா பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →