இந்தியா

குடியரசுத் தலைவருக்கு அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நிறைவு

DIN


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இதுபற்றி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்காக மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுகள். அவரது உடல்நலம் குறித்து எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசினேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (75) இதயப் பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த குடியரசுத் தலைவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்தது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவரை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT