முகப்பு
இந்தியா

மும்பை தனியார் மருத்துவமனையில் கூடுதலாக 2,269 கரோனா படுக்கைகள்

மும்பையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக கூடுதலாக 2,269 கரோனா படுக்கை வசதிகளை வழங்க பிரஹன் மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
மும்பை தனியார் மருத்துவமனையில் கூடுதலாக 2,269 கரோனா படுக்கைகள்
பகிர்:

மும்பையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக கூடுதலாக 2,269 கரோனா படுக்கை வசதிகளை வழங்க பிரஹன் மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் 360 ஐசியூ உள்பட கூடுதலாக 2,269 கரோனா படுக்கைகளை உடனடியாக அமல்படுத்த உள்ளது, தற்போது மும்பையில் காலியாக உள்ள 3000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் இல்லாமல் இது கூடுதலாக வழங்கப்படுகிறது என்று கமிஷனர் இக்பால் சிங் சாஹல் கூறினார். 

மேலும், மருத்துவமனையில் நேரடியாகப் படுக்கை அறைகள் ஒதுக்கப்படாது. யாரும் சோதனை ஆய்வகங்களிலிருந்து நேரடியாக கரோனா அறிக்கை வாங்க முயற்சிக்கக்கூடாது. 

தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து ஐ.சி.யூ படுக்கைகளும் கரோனா நோயாளிகளுக்கு வார்டு போர் அறை ஒதுக்கீட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளில் எந்தவொரு மருத்துவமனைகளையும் நேரடியாக அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். 

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,888 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. மேலும், 3,561 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.