இந்தியா

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் 350 பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு

DIN

கரோனா இரண்டாவது அலையில், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இதுவரை, 350 பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், இங்கு ஏப்ரல் மத்தியில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அப்போதுதான் திருப்பதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது விண்வெளி மைய ஊழியர்கள் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றினர்.

அப்போதிலிருந்து நாள்தோறும் 30 - 40 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்பந்தப் பணியார்கள் பணிக்கு வரவழைக்கப்படவில்லை. தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT