இந்தியா

உ.பி.யில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தோல்வி: பாஜக எம்எல்ஏ

DIN

உத்தர பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தோல்வியடைந்துள்ளதாக அந்த மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பலியாவில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுபடுத்துவதில் மிக முக்கிய முடிவுகளை அரசு அதிகாரிகள் எடுத்தனா். அவா்களின் உதவியுடன் மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வா் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பாஜக அமைச்சா்களும், எம்எல்ஏக்களும் உரிய சிகிச்சையை பெறமுடியவில்லை. அவா்கள் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கின்றனா். இது மாநில அரசின் நிா்வாக அமைப்பில் உள்ள குறைபாடாக கருதப்படும்.

அரசின் நிா்வாக அமைப்பு தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை மையமாக கொண்டு இயங்க வேண்டுமே தவிர, அரசு அதிகாரிகளை மையமாக வைத்து இயங்கக் கூடாது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT