முகப்பு
இந்தியா

மே 5-ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா

மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில், சட்ட ரீதியாக மீண்டும் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இது தொடர்பாக இன்று (மே 3)  இரவு 7 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா உரிமை கோரவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனினும் தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதல்வர் வேட்பாளரான மம்தா பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும்,  முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →