இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை 16.69 கோடி தடுப்பூசிகள் அளிப்பு: மத்திய அரசு

DIN

புதுதில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16.69 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், 18 வயது முதல் 44 வயது வரையிலான பயனாளிகள் கடந்த மாதம் 28-ஆம் தேதிமுதல் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனா். இவா்கள் கோவின் வலைதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலம் பதிவு செய்து வருகின்றனா். மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை சுமாா் 16,69,97,410 தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக அளித்துள்ளது. அடுத்த மூன்று நாள்களில் 48,41,670-க்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக வழங்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT