முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்

ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மூன்று அல்-பத்ர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஒருவர் சரண்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மூன்று அல்-பத்ர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் கனிகம் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்தை சுற்றி வளைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். 

இந்த நடவடிக்கையின் போது தீவிரவாதிகள் சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து ஒருவர் சரணடைந்தார். மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் துப்பாக்கி நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் டேனிஷ் மிர், முகமது உமர் பட் - கஜாபோரா சோபியானில் வசிப்பவர்கள் என்றும், மேலும் ஒருவர் சோபியானின் ராபன் பகுதியில் வசிக்கும் ஜைத் பஷீர் ரேஷி என செய்தித் தொடர்பாளர் அடையாளம் காட்டினார்.

காவல்துறையினரின் தகவலின்படி அவர்கள் அல்-பத்ர் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று தெரியவந்தது. 

மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.