முகப்பு
இந்தியா

பாக்தாத் அருகே 3 ஐ.எஸ் தலைவர்கள் சுட்டுக் கொலை 

பாக்தாத் அருகே ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு சேவை (சி.டி.எஸ்) கமாண்டோக்கள், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் மூன்று தலைவர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 மே, 2021 at 2:11 PM
பாக்தாத் அருகே 3 ஐ.எஸ் தலைவர்கள் சுட்டுக் கொலை 
பகிர்:

பாக்தாத் அருகே ஈராக்கிய பயங்கரவாத தடுப்பு சேவை (சி.டி.எஸ்) கமாண்டோக்கள், ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் மூன்று தலைவர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈராக் படைகளின் தளபதியின் செய்தித் தொடர்பாளர் யஹியா ரசூல் வெளியிட்ட அறிக்கையில், 

பாக்தாத்தின் தென்மேற்கே அல்-ரத்வானியா பகுதியில் சி.டி.எஸ் படைகள் ஐ.எஸ் பயங்கர குழுவின் மறைவிடத்தைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

கடந்த ஜனவரி 21ஆம் தேதி பாக்தாத் நகரத்தில் உள்ள பாப் அல்-ஷார்ஜி பகுதியில் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 116 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.