கரோனா தொற்று பரவல்: 3 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக 3 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தியாகரோனா தொற்று பரவல்: 3 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக 3 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக 3 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாக தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மணிப்பூர், சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.