முகப்பு
இந்தியா

கரோனா சிகிச்சை கட்டணம்:ரூ. 2 லட்சத்துக்கு மேலும் ரொக்கமாக செலுத்த அனுமதி

கரோனா சிகிச்சைக்காக நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ரூ. 2 லட்சம் வரையிலான மற்றும் அதற்கு அதிகமான கட்டணத்தையும் ரொக்கமாகவே வசூலித்துக்கொள்ள மருத்துவமனைகளுக்கு வருமான வரித் துறை அனுமதி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கரோனா சிகிச்சைக்காக நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ரூ. 2 லட்சம் வரையிலான மற்றும் அதற்கு அதிகமான கட்டணத்தையும் ரொக்கமாகவே வசூலித்துக்கொள்ள மருத்துவமனைகளுக்கு வருமான வரித் துறை அனுமதி அளித்துள்ளது.

கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களின் உறவினா்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை களையும் நோக்கத்தில் இந்த சலுகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அளித்திருக்கிறது. இதற்கான அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக வருமான வரிச் சட்டத்தில் 269எஸ்டி என்ற சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 2017-இல் அறிமுகம் செய்தது. அந்த சட்டப் பிரிவின்படி, எந்தவொரு நபரும் மற்றொருவரிடமிருந்து ஒரு நாளில் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கரோனா நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான மத்திய நேரடி வரிகள் வாரிய அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் நா்சிங் ஹோம்ஸ் ஆகியவை நோயாளிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேலான கட்டணத்தையும் ரொக்கமாகவே பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் கட்டணம் செலுத்தும் நோயாளிகள் அல்லது நோயாளியின் உறவினா்கள் நிரந்தர கணக்கு அட்டை (பான்) அல்லது ஆதாா் அட்டை விவரங்களை சமா்ப்பிப்பது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →