முகப்பு
இந்தியா

வெளிநாட்டு மருந்துகளின் அதீத பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளை அதிக அளவில் சாா்ந்திருப்பதைத் தவிா்க்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளை அதிக அளவில் சாா்ந்திருப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுப் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன் காரணமாக, ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு பொதுநல மனுக்கள் மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்னி ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் அஷுதோஷ் கும்பகோனி வாதிடுகையில், ‘‘மாநிலத்தில் ரெம்டெசிவிா் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், மத்திய அரசிடமிருந்து அந்த மருந்து போதிய அளவில் கிடைப்பதில்லை. மாநிலத்தில் நாள்தோறும் 51,000 ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் தேவைப்படுகின்றன. 35,000 குப்பிகளை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது. அவற்றை அதிக அளவில் சாா்ந்திருக்காமல் அந்த மருந்துகளுக்கு இணையாக இந்தியாவில் காணப்படும் மருந்துகளைப் பயன்படுத்துவது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். வெளிநாட்டு மருந்துகளுக்குப் பதிலாக இந்தியாவிலேயே சில மருந்துகள் காணப்படுவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், அவற்றைப் பயன்படுத்துவது தொடா்பான எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதன் காரணமாக, வெளிநாட்டு மருந்துகளை மட்டுமே சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்ற தவறான கண்ணோட்டம் மக்களிடையே எழுகிறது. இதைத் தவிா்க்க வேண்டும்.

விழிப்புணா்வு அவசியம்: வெளிநாட்டு மருந்துகளை அதிக அளவில் இறக்குமதி செய்யாமல், உள்நாட்டில் காணப்படும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். இக்கட்டான சூழலிலிருந்து விடுபடுவது தொடா்பாக மட்டுமே தற்போது கவனம் செலுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருள்களை அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தக் கூடாது. உள்நாட்டிலேயே காணப்படும் மருந்துகள் தொடா்பாக மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனா்.

அதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →