முகப்பு
இந்தியா

கேரளத்தில் கரோனாவுக்கு பத்திரிகையாளர் பலி

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளார். 

Updated On : 10 மே, 2021 at 10:17 AM
பகிர்:

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளார். 

விபின் சந்த் (42). கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். 
இவர் மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகன் மகேஸ்வருடன் வசித்து வந்தார். 

அவரது மரணத்தைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை முன்னணி தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. 

Advertisement

விபின் கடந்த 2005ஆம் ஆண்டில் இந்தியா விஷன் மலையாள செய்தி தொலைக்காட்சியில் தனது பணியைத் தொடங்கினார். கடந்த 2012இல் மாத்தரபூழியில்  சேர்ந்தார்.

இவரது உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மத்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் பல அரசியல் தலைவர்கள், அனைத்துத்தரப்பு மக்கள் பத்திரிகையாளர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.