முகப்பு
இந்தியா

ம.பி.: போபாலில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
ம.பி.: போபாலில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பகிர்:


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் தலைநகரான போபாலில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மே 17-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஏப்ரல் 12-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா பரவல் குறையாததால் மேலும் 7 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

போபாலில் இதுவரை 1,02,776 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 788 உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.