இந்தியா

கேரளத்தில் மே 23 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

DIN

கேரள மாநிலத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை மே 23ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 8 தேதி கேரளத்தில் 9 நாள்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வர இருந்தநிலையில் அதனை மேலும் நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மே 23 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கேரள அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளித்துள்ளது. 

மேலும் கரோனா அதிகம் பாதித்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT