முகப்பு
இந்தியா

லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது எய்ம்ஸ் மருத்துவக் குழு

லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

லேசான பாதிப்புள்ள கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு வெளியிட்டுள்ளது.

காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோா்வு, சுவை மற்றும் வாசனை இழப்பு, தொண்டை எரிச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு மற்றும் வெகு சில பாதிப்புகளில் கண்கள் சிவப்பாதல் ஆகியவை கரோனா நோயாளிகளிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவா் நீரஜ் நிஷ்சல் தெரிவித்தாா். சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றில் அவா் மேலும் பேசியதாவது:

பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள 80 சதவீத நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. ஆா்டி-பிசிஆா் பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்து அறிகுறிகள் தொடா்ந்தால் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை அனுமதி தேவையா இல்லையா என்பது குறித்து மருத்துவா்கள் குழு முடிவெடுக்கும். முறையான அளவில் சரியான நேரத்தில் மருந்துகள் உட்கொள்ளப் பட வேண்டும்.

நோயாளிகள் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை எவ்வாறு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொண்டால் மட்டுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

அறுபது வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நாள்பட்ட நோய்கள் உடையவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் குறித்து முடிவெடுக்க வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான மருந்துகளையும் வீட்டு தனிமையில் உள்ளோா் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அந்தக கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.