இந்தியா

ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா

ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 94,550 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 24,171 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,32,596ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 101 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 9,372ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து இன்று 21,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2,10,431 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT