இந்தியா

தெலங்கானாவில் மரத்தின் மீது கட்டிலை கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட இளைஞர்

DIN

தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் மரத்தின் மீது கட்டிலை கட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தில் வசித்து வருபவர் சிவா(வயது 25). சிறிய வீட்டில் வசித்து வரும் இவருக்கு
அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிவாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஆனால் சிவா, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். ஒரே ஒரு அறை மட்டும் இருக்கும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டால் வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவிவிடும் எனவும் அவர் அஞ்சினார். 

உடனே சிவா இதற்காக தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார். அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டிய சிவா அதில் தன்னை
தனிமைப்படுத்திகொண்டிருக்கிறார். அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT