கேரளத்தில் மேலும் 31,337 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,337 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,337 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியது:
"கேரளத்தில் புதிதாக 31,337 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 87 பேர் பலியானது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கான மொத்த பலி எண்ணிக்கை 6,602 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 45,926 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,46,105 பேர் குணமடைந்துள்ளனர். கேரளத்தில் மொத்தம் 3,47,626 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.