தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம்
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் குறித்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் 199 மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 81.7 சதவிகிதத்திலிருந்து 85.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.8% இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 4,22,436 பேர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாட்டின் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.