கர்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்து சேர்ந்தன: சுகாதாரத்துறை
கா்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.
கா்நாடகத்துக்கு மேலும் 2 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்தன என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் கர்நாடகத்தில் வழங்கப்படுகின்றன. அதன்படி,
உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்வதன் ஒரு பகுதியாக 9,50,000 கோவிஷீல்டு மற்றும் 1,44,000 கோவாக்சின் என இதுவரை 10,94,000 டோஸ்களைப் பெற்றுள்ளன. மேலும், கூடுதலாக 1,11,24,470 டோஸ்களை இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.
கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் 30,309 கரோனா வழக்குகளும், 525 இறப்புகளும் பதிவாகியுள்ளது.