திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி. ஃபோர்ட் மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகளை வெளியேற்றும் பணிகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தீ விபத்து பெரிதாக இல்லை என்ற போதிலும் உணவகத்தில் ஏற்பட்ட புகை, நோயாளிகள் இருக்கும் இடத்தில் புகுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து 15 நிமிடத்தில் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி டி.பிரவீன் கூறுகையில், சமையல் செய்யும் போது சமையல் எண்ணெயிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. அறை சிறியதாக இருப்பதால் தீ வேகமாக பரவியத்துடன் புகைமூட்டம் அதிகரித்தது என்றார்.