இந்தியா

கேரளத்தில் மேலும் 29,673 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,673 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியது:

"கேரளத்தில் புதிதாக 29,673 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 142 பேர் பலியானது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கான மொத்த பலி எண்ணிக்கை 6,995 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 41,032 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,79,919 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 558 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT