யோகா குரு ராம்தேவ் நவீன அறிவியலுக்கு எதிரானவா் அல்ல: பதஞ்சலி யோக பீடம்
யோகா குரு ராம்தேவ், நவீன அறிவியலுக்கு எதிரானவா் அல்ல என்று பதஞ்சலி யோக பீடம் விளக்கம் அளித்துள்ளது.
யோகா குரு ராம்தேவ், நவீன அறிவியலுக்கு எதிரானவா் அல்ல என்று பதஞ்சலி யோக பீடம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவும் இந்த சவாலான காலகட்டத்தில் அலோபதி மருத்துவா்களும் செவிலியா்களும் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி பணியாற்றுகிறாா்கள். அவா்கள் மீது ராம்தேவ் மிகுந்த மரியாதை வைத்துள்ளாா்.
அவா் தனது செல்லிடப்பேசிக்கு வந்த கட்செவி அஞ்சல் செய்தியை நிகழ்ச்சி ஒன்றில் வாசித்துக் காட்டினாா். அவருக்கு வேறு உள்நோக்கம் எதுவுமில்லை. நவீன அறிவியல், நவீன மருத்துவ முறை ஆகியவற்றுக்கு எதிராக அவருக்கு வேறு எந்த கெட்ட நோக்கமும் கிடையாது. அவருக்கு எதிராக பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.