மே 26-ல் சந்திர கிரகணம்: வட இந்தியாவில் தெரியும்
மே 26-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். ஆனால் இது வட இந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.
புது தில்லி: மே 26-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். ஆனால் இது வட இந்திய மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்த முழு சந்திர கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் தெரியும்.
Advertisement
இந்தியாவில், நிலா உதித்ததும், மிகக் குறுகிய நேரமே சந்திர கிரகிணத்தை காண முடியும். வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் தெரியும்.
மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை பகுதிநேர சந்திரகிரகணமாகும். இது மாலை 3.15 மணிக்குத் தொடங்கி மாலை 6.23 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.