மாநிலங்களுக்கு இதுவரை 21.89 கோடி தடுப்பூசிகள் விநியோகம்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 21.89 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 21.89 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தரவுகளின்படி வீணான 21.89 கோடி தடுப்பூசிகள் உள்பட 19,93,39,750 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது:
"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மேலும் 1,77,67,850 தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் மேலும் 7 லட்சம் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன.
மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கும் இந்திய அரசு உதவுகிறது."