நாட்டில் 19.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை
நாட்டில் இதுவரை 19.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 19.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24.30 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன்படி தற்போது 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நாட்டில் இதுவரை 19.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 74.73 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.