முகப்பு
இந்தியா

அசாமில் நகர்ப்புறங்களில் ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
அசாமில் நகர்புறங்களில் ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
பகிர்:

கரோனா தொற்று பரவலால் அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக ஜூன் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பொதுமுடக்கத்தின் போது கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6221 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →