முகப்பு
இந்தியா

இந்தியாவிலிருந்து ஜப்பான் திரும்புவோருக்கு தனிமைப்படுத்தும் காலம் அதிகரிப்பு

இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.
பகிர்:

டோக்யோ: இந்தியா மற்றும் ஐந்து தென் ஆசிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாள்களாக நீட்டித்து ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.

உருமாறிய கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று வருவோர் இதுவரை 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இது தற்போது 10 நாள்களாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, வெளிநாட்டினர் வர ஜப்பான் தடை விதித்திருந்த நிலையில், தற்போது 6 நாடுகளுக்குச் சென்று திரும்பும் ஜப்பானியர்களுக்கு தனிமைப்படுத்தும் நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.