மருத்துவக் கட்டணம் செலுத்தாததால் உடல்களைத் தர மறுப்பதா? கர்நாடக அரசு எச்சரிக்கை
மருத்துவக் கட்டணத்தை செலுத்தாத உறவினர்களிடம், கரோனாவால் பலியானோரின் உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
பெங்களூரு: மருத்துவக் கட்டணத்தை செலுத்தாத உறவினர்களிடம், கரோனாவால் பலியானோரின் உடல்களைத் தர மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவக் கட்டணத்தை செலுத்தாததால், கரோனாவால் பலியாவோரின் உடல்களைத் தர தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக எழும் புகார் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் கர்நாடக அரசு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், உயிரிழக்கும் கரோனா நோயாளிகளின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்க, எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.