இந்தியா

கேரளத்தில் புதிதாக 29,803 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 29,803 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் முதல்வர் பினராயி விஜயனின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மாநிலத்தில் புதிதாக 29,803 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,43,208 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளோர் விகிதம் 20.84 சதவிகிதமாக உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 202 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 27,502 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 2,005 பேருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

177 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 7,731 ஆக உயர்ந்துள்ளது. 

33,397 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 21,32,071 பேர் குணமடைந்துள்ளனர். 2,55,406 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்." 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT