இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவு: வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய அமைச்சர்

DIN

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசுக்கு எதிரான அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலான 2 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றியது. 

இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

வேளாண் போராட்டம் தொடங்கி (நாளை) மே 26-ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது. அதனையொட்டி, அன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடித்து மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT