முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
உ.பி.யில் சாலை விபத்து; மூன்று பேர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில் மூன்று பேர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முகமதாபாத்தில் உள்ள ஷாஹிந்தா சந்தைக்கு அருகே ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சூர்யாஜித் ராஜ்பர் (19) மற்றும் அவரது மருமகன் பிந்து ராஜ்பர் (16) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மற்றொரு விபத்தில், காசிபூர்-வாரணாசி சாலையில், மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலதிபர் மனோஜ் ஜெய்ஸ்வால் (50), வாரணாசியில் வீடு திரும்பும் போது லாரி மோதியதில் உயிரிழந்தார். 

Advertisement

சைத்பூர் பகுதியில் உள்ள ஆதிஹார் சந்தை அருகே இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments