கர்நாடகத்தில் புதிதாக 26,811 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 26,811 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 26,811 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 19.48 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய (செவ்வாய்க்கிழமை) தினத்தைக் காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் நேற்றைய தினத்தைக் காட்டிலும் 4 சதவிகிதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 40,741 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 530 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 20,62,910 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 26,929 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அந்த மாநிலத்தில் 4,09,924 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.