கர்நாடகத்தில் மேலும் 24,214 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் புதிதாக 24,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 24,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 17.59% சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31,459 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 476 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 20,94,369 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 27,405 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அந்த மாநிலத்தில் 4,02,203 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.