இந்தியா

தில்லியில் கருப்புப் பூஞ்சை நோயால் மேலும் 153 பேர் பாதிப்பு

தில்லியில் கருப்புப் பூஞ்சை நோயால் மேலும் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

DIN

தில்லியில் கருப்புப் பூஞ்சை நோயால் மேலும் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே தாக்கி வருகிறது. கருப்புப் பூஞ்சையால் உயிரிழப்புகள் நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவி வருகிறது. 

நாட்டில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் கருப்புப் பூஞ்சை நோயால் மேலும் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 773ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே கருப்புப் பூஞ்சை நோயைப் பரவும் நோயாக தில்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ராஜஸ்தான், தெலங்கானா அரசுகள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளா்கள் - 11.73 லட்சம் போ் நீக்கம்

பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில திறன் மேம்பாட்டு போட்டிகள்

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறை

கும்பகோணத்தில் திமுக மகளிரணிக்கு தோ்தல் பரப்புரைக்கான பயிற்சி

SCROLL FOR NEXT