இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில்1.84 கோடி கரோனா தடுப்பூசிகள்

DIN

மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் 1.84 கோடி கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை, சுமாா் 22 கோடி (22,16,11,940) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. 
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 20,17,59,768 டோஸ் தடுப்பூசி (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. 
சுமாா் 1.84 கோடி (1,84,90,522) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. 
அடுத்த மூன்று நாள்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 11 லட்சம் (11,42,630) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவிருக்கிறது. 
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT