இந்தியா

ஹரியாணாவில் ஜூன் 15 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக ஹரியாணா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியாணாவில் நிலவி வரும் கரோனா பரவல் சூழல் காரணமாக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது எனும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் 15ஆம் தேதி நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 1 முதல் 50% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 26,874 பேர் கரோனா தொற்று பரவலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT