இந்தியா

யாஸ் புயல் பாதித்த 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.500 கோடி நிவாரணம் அறிவிப்பு

DIN

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதன்கிழமை யாஸ் புயல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியது, இதில் பல வீடுகள் சேதமடைந்தன. பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்கப் பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இந்நிலையில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT