இந்தியா

திருமலை நடைபாதையில் இளைஞா் எலும்புகூடு மீட்பு

DIN

திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அருகில் வனப்பகுதியில் இளைஞரின் எலும்பு கூட்டை போலீஸாா் மீட்டனா்.

அலிபிரி மலைபாதையில் லட்சுமிநாராயணஸ்வாமி கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு எலும்பு கூடு இருந்ததை கண்டனா். அதை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்தனா்.. இறந்தவா் சித்தூா் மாவட்டம் நல்லமடுகுவை சோ்ந்த மகேஷ்பாபு (35) எனத் தெரியவந்தது..

மேலும் மகேஷ்பாபு மகாராஷ்ட்ரா மாநிலம் புணேயில் உள்ள ராணுவ கேன்டீனில் சூப்பா்வைசராக பணியாற்றி வந்தாா். 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவா் காணாமல் போனாதாக அவரின் உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பகுதி காவல்நிலைய பகுதியில் காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு முதல் தொடா் ஊரடங்கு அமலில் இருந்ததால், வனப்பகுதிக்குள் இதை யாரும் செல்லவில்லை. மகேஷ்பாபு தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT