முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,600 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16-க்குப் பிறகு இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிதாக 18,600 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 57,31,815 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 402 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 94,844 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மொத்தம் 22,532 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 53,62,370 பேர் குணமடைந்துள்ளனர்.

குணமடைவோர் விகிதம் தற்போது 93.55 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவிகிதமாக உள்ளது. 

இன்றைய நிலவரப்படி 2,71,801 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.