'பிரதமரின் இமேஜை காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் பேச நிர்பந்திக்கப்படுகின்றனர்' - ராகுல் காந்தி
பிரதமரின் போலி இமேஜை காப்பாற்றுவதற்காக பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் பேச கட்டாயப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் போலி இமேஜை காப்பாற்றுவதற்காக பல்வேறு துறைசார்ந்த அமைச்சர்கள் பேச கட்டாயப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் பல்வேறு துறை அமைச்சர்கள் பேச நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் கரோனா தடுப்பூசி இயக்கத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்தி டூல் கிட் அறிக்கையை வாசிக்கிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.