முகப்பு
இந்தியா

மோடியின் ஆணவத்தால் 97 சதவிகித இந்தியர்களின் வருமானத்தில் சரிவு: ராகுல் சாடல்

​பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவப் போக்கால் 97 சதவிகித இந்தியர்கள் கரோனாவுக்குப் பிறகு ஏழையாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமரிசித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பொது முடக்க காலத்தில் பேருந்து நிறுத்ததில் ஓய்வெடுக்கும் தொழிலாளர்கள்
பகிர்:


பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவப் போக்கால் 97 சதவிகித இந்தியர்கள் கரோனாவுக்குப் பிறகு ஏழையாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமரிசித்தார்.

ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியஸ் தரவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"இந்தியாவில் ஊதியத்துக்கு வேலைப் பார்க்கும் எண்ணிக்கையில் பெரிதளவு சரவி ஏற்பட்டுள்ளது. 97 சதவிகித இந்தியர்களுக்கு வருமானம் குறைந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 97 சதவிகிதத்தினர் கடந்தாண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஏழையாகியுள்ளனர்."

இதனைப் பகிர்ந்த ராகுல் சுட்டுரையில், "ஒற்றை நபர், அவரது ஆணவம் மற்றும் ஒற்றை வைரஸ், அதன் உருமாற்றங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.