இந்தியாவில் ஒரேநாளில் 1,52,734 பேருக்கு கரோனா: 3,128 பேர் பலி
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 4ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து 4ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இது தொடா்பாக மத்திய செய்தித் தொடா்புப் பிரிவு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,80,47,534ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 2,38,022 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,56,92,342 ஆக உயர்ந்துள்ளது. 18-வது நாளாக, அன்றாட புதிய பாதிப்புகளை விட, தினசரி குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 3,128 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 20,26,092 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 16,83,135 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 34,48,66,883 கோடி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 21,31,54,129 பேர் கரோனா தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.